‘ஒரு நாடு, ஒரு ரேஷன் கார்டு’ திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை அளித்த தீர்ப்பில் கூறியதாவது, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் “ஒரு நாடு, ஒரு ரேஷன் கார்டு” (ONORC) திட்டத்தை செயல்படுத்த வேண்டும், ஏனெனில் இது புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்ற மாநிலங்களில் பணிபுரியும் இடத்திலும், அல்லது அவர்களின் ரேஷன் கார்டுகள் பதிவு செய்யப்படாத இடத்திலும் ரேஷன் பெற அனுமதிக்கிறது.
ஒரு தேசிய தரவுத்தளத்தை உருவாக்கி அதில் அமைப்புசாரா துறையின் தொழிலாளர்களை பதிவுசெய்வதற்கான ஒரு மென்பொருளை உருவாக்குவதில் தாமதம் ஏற்படுவதை கவனித்த உச்ச நீதிமன்றம், இந்த ஆண்டு நவம்பர் வரை ‘பிரதான்’ மந்திரி கரிப் கல்யாண் யோஜ்னா’ திட்டத்தின் மூலம் ரேஷன் கார்டுகள் இல்லாத புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ரேசன் எவ்வாறு சென்றடையும் என்று கேள்வியும் எழுப்பியுள்ளது.

நீதிபதிகள் அசோக் பூஷண் மற்றும் எம்.ஆர் ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு, அஞ்சலி பரத்வாஜ், ஹர்ஷ் மந்தர் மற்றும் ஜகதீப் சோக்கர் ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்ட பொது நல வழக்கு மீதான தீர்ப்பை வழங்கியது. அதில் கூறியிருப்பதாவது, இந்த கடினமான நேரத்தில் நெருக்கடி பெரிதாக இருப்பதால் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு, பாதுகாப்பு, பணப் பரிமாற்றம், போக்குவரத்து வசதிகள் மற்றும் பிறவற்றை உறுதி செய்ய மத்திய அரசும் மாநில அரசுகளும் முறையான வழிகாட்டுதல்களை மக்களுக்கு வழங்க வேண்டும்.

இந்த மனுவிற்கு பதில் அளிக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து எழுத்துப்பூர்வ அறிக்கை தாக்கல் செய்யுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி, மேற்கு வங்கம், சத்தீஸ்கர் மற்றும் அசாம் போன்ற மாநிலங்கள் இதுவரை ‘ஒரு நாடு, ஒரு ரேஷன் கார்டு’ (ONORC) திட்டத்தை செயல்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow 24news.in on Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் 24news.in தமிழ் இணையதள செய்திகளை உடனுக்குடன் பெற இங்கே 24news.in தமிழ் கிளிக் செய்து follow செய்யுங்கள்.
செய்திகளை உங்கள் வாட்ஸ்அப்-ல் பெற whatsapp link-ஐ click செய்து send கொடுக்கவும்.