Advertisement
உணவு

மாத்தி யோசி- உடலுக்கு நன்மை பயக்கும் சில பானங்கள்

நம்மில் பெரும்பாலானோர் ஒரு தேநீரோ அல்லது காஃபியோ அருந்தாமல் தங்களது நாளை தொடங்குவதே இல்லை. புத்துணர்ச்சிக்காக அருந்தத் தொடங்கி இப்போது அதற்கு அடிமையாகி விட்டோமோ என்று தோன்றும் அளவிற்கு அதிகமாக அருந்துகிறோம். இதற்கு மாற்று வழி இருக்கிறதா? தேனிருக்கும் காஃபிக்கும் மாற்றாக நாம் வேறு எந்த பானத்தை அருந்தலாம்? இதோ சில யோசனைகள்

இஞ்சிப் பால்

சிறிதளவு இஞ்சியை நீரில் தட்டிப்போட்டு கொதிக்கவைத்து பாலுடன் கலந்து அருந்தலாம். இனிப்பிற்கு நாட்டு சக்கரை அல்லது கருப்பட்டி சேர்த்துக்கொள்ளலாம். உடலுக்கு நன்மையளிப்பதோடு இந்த பானம் புத்துணர்ச்சியும் அளிக்கும்.

Advertisement

பலன்கள்:

  • நோயெதிர்ப்புக்சக்தியை அதிகரிக்கும்
  • உடலில் உள்ள கொழுப்புகளை குறைக்கும்
  • நுரையீரலை சுத்தப்படுத்தும்

வெந்தய டீ

சிறிதளவு வெந்தயத்தை ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும் அவற்றை தண்ணீருடன் சேர்த்து நன்றாக கொதிக்கவிட்டால் வெந்தய டீ தயார் .
இதனை அப்படியே அருந்தலாம் அல்லது இனிப்புக்காக சிறிது தேன் சேர்த்தும் அருந்தலாம்.

பலன்கள்:

  • வெந்தயம் உடல் சூட்டை தணிக்க உதவுகிறது
  • மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் வயிற்று வலியை குறைக்க உதவும்
  • ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும்
  • உடல் எடையை குறைக்க உதவும்
  • முடியின் வளர்ச்சிக்கு உதவும்

செம்பருத்திப் பூ டீ

5 இதழ் கொண்ட செம்பருத்திப் பூவின் இதழ்களை சுத்தப்படுத்தி எடுத்துக் கொள்ள வேண்டும். அவற்றை ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து அவற்றிலிட்டு பாத்திரத்தை மூடி நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். பின்பு அதனை வடிகட்டி அதனுடன் நாட்டுச் சர்க்கரை அல்லது தேன் கலந்து சிறிது எலுமிச்சை சாறுடன் பரிமாறலாம். விருப்பமுள்ளவர்கள் சிறிதளவு இஞ்சியும் இதனுடன் சேர்த்துக் கொள்ளலாம்.

பலன்கள்:

  • செம்பருத்திப் பூ இரத்தத்தை சுத்திகரிக்க உதவுகிறது
  • இதய நோயை தடுக்கிறது, இதயத்தை வலுப்படுத்தவும் உதவுகிறது
  • நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டுகிறது
  • உடல் சூட்டை தணிக்கிறது

கொய்யா இலை டீ

கொய்யா இலை பல்வேறு சத்துக்களை கொண்டுள்ளது. கொய்யா இலையை நன்றாக கழுவி சுத்தப்படுத்தி எடுத்துக் கொள்ளவேண்டும். அவற்றை ஒரு பாத்திரத்தில் இட்டு தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விட்டு வடிகட்டினால் கொய்யா இலை டீ தயார். இதனுடன் தேன் அல்லது நாட்டுச் சர்க்கரை கலந்து அருந்தலாம்.

பயன்கள்:

  • ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க உதவுகிறது
  • உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைத்து நல்ல கொழுப்பை பராமரிக்க உதவுகிறது
  • உடல் எடையை குறைக்க உதவுகிறது

ஆவாரம் பூ டீ

ஆவாரம் பூ பல இடங்களில் கிடைக்கிறது. கிடைக்காதவர்கள் நாட்டு மருந்து கடையில் ஆவாரம் பூவாகவும் அல்லது பொடியாகவும் கிடைக்கும் அவற்றை வாங்கி தேநீர் தயாரித்து அருந்தலாம். ஆவாரம் பூ அல்லது பொடியினை நீரில் கொதிக்கவிட்டு பால் சேர்த்து அருந்தலாம்.  இனிப்பிற்காக நாட்டுச்சக்கரை சேர்த்துக்கொள்ளலாம்.

பலன்கள்:

  • ரத்தத்தை சுத்திகரிக்க உதவுகிறது
  • சரும பராமரிப்புக்கும் உதவுகிறது
  • இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக பராமரிக்கிறது

Back to top button
error: Content is protected !!

AdBlocker Detected

Kindly Disable your adblocker/ advertisement blocker in websites for this page.