இன்று காலை ஹைதராபாத்தில் மக்கள், சூரியனை சுற்றி வானவில் போன்ற வளையம் தோன்றியதை பார்த்து ஆச்சரியமாகவும் ஆர்வமாகவும் பலர் கண்டு ரசித்தனர். இதை புகைப்படம் எடுத்து பலர் தங்கள் சோசியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்தனர்.
கடந்த ஆண்டு ராமேஸ்வரத்தில் இதேபோன்ற வானவில் நிற வளையம் காணப்பட்டது. இதனால் தெலுங்கானாவில் காணப்பட்ட நிகழ்வு முதல் நிகழ்வு அல்ல.
அது ஏன் நடக்கிறது?
ஒளியின் சிதறல் காரணமாக இந்த அரிய நிகழ்வு நடைபெறுகிறது. இன்று காலை ஹைதராபாத்தில் சூரியனை சுற்றி வானவில் நிற வட்டம் தோன்றிய சம்பவம் மக்களை வியப்பில் ஆழ்த்தியது.
தெலுங்கானாவின் சில பகுதிகளில் சூரியனைச் சுற்றி தோன்றிய ஒளிவட்டம் 22 டிகிரி வளையமாகும், வெள்ளை ஒளி, மேகங்களில் காணப்படும் பனி படிகங்கள் வழியாகச் செல்லும்போது ஒளியின் சிதறல் காரணமாக இந்த வட்டம் தோன்றுகிறது. இதனால் இந்த ஒளிவட்டம் பல வண்ணங்களைக் கொண்டுள்ளது.
சூரியனின் ஹாலோ என்றால் என்ன?
இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தின் கூற்றுப்படி, “ஒளிவட்டம் என்பது சூரியன் அல்லது சந்திரனில் இருந்து 22 டிகிரி ஒளியின் வளையமாகும். இது அறுகோண வடிவ பனி படிகங்களின் வழியாக ஊடுருவி செல்வதால் உருவாகும் ஒரு பொதுவான ஒளிவட்டமாகும்.” இந்த ஒளிவட்டம் ஆங்கிலத்தில் holo என்று அழைக்கப்படுகிறது.
எவ்வாறு உருவாகிறது?
மேகங்களில் மில்லியன் கணக்கான பனி படிகங்கள் உள்ளன. அவை ஒரு வட்ட வடிவ வானவில் போன்ற வளைய தோற்றத்தை அளிக்க ஒளியைப் பிரித்து பிரதிபலிக்கின்றன. செயல்பாட்டின் போது, ஒளியானது பனி படிகங்கள் வழியாக செல்லும்போது இரண்டு வெவ்வேறு ஒளிவிலகல்களுக்கு உட்படுகிறது. இரண்டாவது ஒளிவிலகலின் போது, பனி படிகத்தின் விட்டம் பொறுத்து வளைந்து வட்ட வடிவத்தை பெறுகிறது. இரண்டு ஒளிவிலகல்கள் அதன் அசல் புள்ளியிலிருந்து 22 டிகிரி அளவில் வளையம் உருவாக்குகிறது.