அது இப்போ வருமோ…
எப்போ வருமோ…
இந்தியாவில் பல மாநில ஊரடங்கு பிறப்பித்தும் இன்னும் கொரோனா-வின் நோய்தொற்று குறையாத போதும் கொரோனா நோயாளிகளைக் குறிவைத்து கருப்பு பூஞ்சை தொற்று அதிகரித்து வரும் நிலையில், பீகாரின் பாட்னாவில் நான்கு பேருக்கு வெள்ளை பூஞ்சை தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. கருப்பு பூஞ்சை விட வெள்ளை பூஞ்சை மிகவும் ஆபத்தானதாக கருதப்படுகிறது. பாதிக்கப்பட்ட நோயாளிகளில் விவரம் தெரியவில்லை.
கருப்பு பூஞ்சை தொற்றுநோயை விட வெள்ளை பூஞ்சை தொற்று மிகவும் ஆபத்தானது, ஏனெனில் இது நுரையீரல் மற்றும் உடலின் பிற பகுதிகளை நகங்கள், தோல், வயிறு, சிறுநீரகம், மூளை, தனியார் பாகங்கள் மற்றும் வாய் ஆகியவற்றை பாதிக்கிறது.
வெள்ளை பூஞ்சை நுரையீரலையும் பாதிக்கிறது என்றும் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு HRCT செய்யப்படும்போது COVID-19 போன்ற தொற்று கண்டறியப்படுவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
“இதுவும் கடந்து போகும்” என மக்கள் பதட்டம் அடையாமல் இருக்கவேண்டும்.
#BlackFungus #WhiteFungus #Corona இவற்றை கொண்டு தற்போது ட்விட்டர்-ல் பல வகையான மீம்ஸ்கள் வந்துகொண்டு உள்ளது.
மக்களின் மனநிலை தற்போது
(ரஜினிகாந்த் பாடல் வரிகள்தான் தான் ஒலிக்கிறது)
ஒரு கோல கிளி (கரும்பூஞ்சை/வெள்ளைபூஞ்சை) சோடி(கொரோனா) தன்னை
தேடுது தேடுது மானே(மக்களே)
அது திக்க விட்டு தெசையை விட்டு
நிக்குது நிக்குது முன்னே அது இப்போ வருமோ…
எப்போ வருமோ…