Advertisement
அரசியல்

தமிழக முதல்வருக்கு எதிர்க்கட்சி தலைவர் வைத்த வேண்டுகோள்!

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று இந்த கொரோனா பேரிடர் எனும் சவாலான காலகட்டத்தில் தமிழக முதல்வராக பொறுப்பேற்று இருக்கும் திரு. ஸ்டாலின் அவர்களுக்கு எதிர்க்கட்சி தலைவர் திரு. எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் ட்விட்டரில் விடுத்த வேண்டுகோள்.

தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளிலும், தனியார் மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் மற்றும் ரெம்டெசிவிர் போன்ற உயிர் காக்கும் வசதிகள் இன்றி பல்லாயிரக்கணக்கில் கொரோனா பாதித்த மக்கள் அல்லல்படுவதையும், படுக்கை வசதியின்றி தவிப்பதையும், ஆக்சிஜன் பற்றாக்குறையால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு பலர் உயிரிழப்பதையும் அறிந்து ஆற்றொனாத் துயரமும், மிகுந்த மனவேதனையும் அடைகிறேன்.

Advertisement

மக்களை காக்கின்ற பெரும் பொறுப்பு தற்போதைய அரசுக்கு இருப்பதால், மாண்புமிகு முதலமைச்சர் திரு. ஸ்டாலின் அவர்கள்,கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு வரும் பொதுமக்களின் விலைமதிப்பில்லா இன்னுயிரை பாதுகாத்திடும் வகையில், அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கவும், போதிய ஆக்சிஜன் கிடைக்கவும், தடுப்பு மருந்துகள் கிடைக்கவும், போர்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு தனது ட்விட்டர் வலைதள பதிவில் கேட்டுக்கொண்டுள்ளார்.

Back to top button
error: Content is protected !!

AdBlocker Detected

Kindly Disable your adblocker/ advertisement blocker in websites for this page.