Advertisement
அரசியல்சமூகம்செய்திகள்

#COVID19 பெருந்தொற்றை கட்டுபடுத்த அனைத்துக்கட்சி உறுப்பினர்களை கொண்ட ஆலோசனை குழு

தமிழ்நாட்டில்கொரோனா இரண்டாவது அலையை கட்டுபடுத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து சட்டமன்ற கட்சித்தலைவர்கள் கூட்டம் 13.05.2021 அன்று தலைமை செயலகத்தில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டதீர்மானங்களில் ஒன்றாக பின்வரும் தீர்மானம் (தீர்மானம் 4) நிறைவேற்றப்பட்டது.

“நோய்த்தொற்று பரவலை கட்டுபடுத்தும் வழிமுறைகள் குறித்த ஆலோசனைகளை வழங்க, சட்டமன்ற கட்சிகளைச் சார்ந்த உறுப்பினர்களை கொண்ட ஒரு ஆலோசனை குழு அமைக்கலாம் என தீர்மானிக்கப்பட்டது”

Advertisement

மேலே குறிப்பிடப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் அனைத்து சட்டமன்ற கட்சிகளைச் சார்ந்த உறுப்பினர்களை கொண்ட ஒரு ஆலோசனை குழு முதல்வர் தலைமையில் அமைக்கப்படுகிறது.

ஆலோசனைக் குழு உறுப்பினர்கள்:

வ. எண்அரசியல் கட்சிசட்டமன்ற உறுப்பினர் பெயர்
1திமுகமருத்துவர் நா. எழிலன்
2அதிமுகமருத்துவர் சி. விஜய பாஸ்கர்
3காங்கிரஸ்திரு.ஏ.எம். முனிரத்தினம்
4பாமகதிரு.ஜி.கே. மணி
5பாஜகதிரு. நயினார் நாகேந்திரன்
6மதிமுகமருத்துவர் தி. சதன் திருமலைக்குமார்
7விசிகதிரு எஸ்.எஸ். பாலாஜி
8இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)திரு. வி.பி. நாகை மாலி
9இந்திய கம்யூனிஸ்ட் கட்சிதிரு. தி. ராமசந்திரன்
10மனித நேய மக்கள் கட்சிமுனைவர் ஜவாஉறிருல்லா
11கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிதிரு. ரா. ஈஸ்வரன்
12தமிழக வாழ்வுரிமை கட்சிதிரு. தி. வேல்முருகன்
13புரட்சி பாரதம்பூவை திரு ஜெகன் மூர்த்தி

இந்த ஆலோசனை குழுவானது அவசர அவசியம் கருதி நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுபடுத்தும் வழிமுறைகள் குறித்து ஆலோசனைகள் பெற அவ்வபோது கூடி விவாதிக்கும். இக்குழுவிற்கு பொதுத்துறை செயலாளர் உறுப்பினர் செயலராக செயல்படுவார்.

இவ்வாறு தமிழக அரசு வெளியிட்ட செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Back to top button
error: Content is protected !!

AdBlocker Detected

Kindly Disable your adblocker/ advertisement blocker in websites for this page.