நடிகை அனிதா ஹசானந்தனி, வருஷாமெல்லம் வசந்தம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மேலும் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய சாமுராய் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்தார். அவர் 2013 ஆம் ஆண்டில் ரோஹித் ரெட்டியை மணந்தார், சமீபத்தில் இந்த ஜோடிக்கு ஒரு ஆண் குழந்தையும் (ஆரவ் ரெட்டி) பிறந்தது.
தமிழ் திரையுலகில் அதிக வெற்றியைப் பெறவில்லை என்றாலும், அவர் இந்தி தொலைக்காட்சித் துறையில் தனக்கென ஒரு பெயரை உருவாக்கிக் கொண்டார், மேலும் நாகின், யே ஹை மொஹபதீன் போன்ற சூப்பர்ஹிட் தொடர்களில் நடித்துள்ளார். அவர் இன்ஸ்டாகிராமில் மிகவும் சுறுசுறுப்பாக உள்ளவர். சமீபத்தில் அவர் தனது கணவரை கன்னத்தில் அறைந்த வீடியோவை வெளியிட்டு மற்ற மனைவிகளை வீட்டில் இதை முயற்சி செய்யச் சொல்லியும் கூறியுள்ளார்.
இந்த வீடியோவில், அவர் ஏதோ மேஜிக் செய்யப் போகிறேன் என்று கணவனை நம்ப வைக்கிறார். அவரது கணவரின் காதுகளுக்கு குறுக்கே ஒரு கற்பனை நூல் ஓடுகிறது என்று சொல்கிறார், பின்னர் அனிதா ரோஹித்தை ஒரு பக்கத்தின் நூலைப் பிடிக்கச் சொல்கிறார், எதிர்பாராத விதமாக அவர், கணவரின் மறுபக்க கண்ணத்தில் அறைகிறார். முற்றிலும் அதிர்ச்சியடைந்த ரோஹித் ரெட்டி எழுந்து வெளியேறுகிறார். இவ்வாறு அந்த வீடியோ முடிகிறது.
வீடியோ தலைப்பு: தயவுசெய்து இதை வீட்டில் முயற்சிக்கவும்.
யார் யாரெல்லாம் அடி வாங்கப்போகிறார்களோ?